12.01.2015 இன்று SSTA மாநில பொறுப்பாளர்கள் சென்னையில் மதிப்பிற்குரிய கல்வி துறை செயலாளர் மற்றும் நமது தொடக்க கல்வித்துறை இயக்குனர் அவர்களையும் சந்தித்து புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் கடந்த முறை வலியுறுத்திய CRC சிறப்பு தற்செயல் விடுப்பு,பின்னேற்பு வழங்க வேண்டியவர்களுக்கு அரசாணையும் கோரி வலியுறுத்தப்பட்டது. அரசு விரைவில் CRC க்கான அரசாணை விரைவாக வெளியிடப்படும் என்றார். பின்னேற்பு வேண்டுபவர்கள் பட்டியல் பெறப்பட்டு தொகுத்து விரைவில் அரசாணை வெளியிடுவதாக உறுதியளித்தார்.
2012-TET ஆசிரியர்கள் தகுதிகாண் பருவம் முடிக்க உள்ள சிரமங்கள் எடுத்துரைக்கப்பட்டது. எந்த ஒன்றியத்திலாவது 16.12.2014 தகுதி காண் பருவம் முடித்து உண்மைதன்மை பெறாமல் இருந்து, முன்னுரிமை பட்டியலில் பெயர் சேர்க்கபடாமல் இருப்பின் அந்த ஒன்றியத்தின் பெயர் கோரப்பட்டுள்ளது. உங்கள் ஒன்றியத்தில் அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் அவ்வாறு இருப்பின் உடனடியாக கீழ்கண்ட எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் 9843156296-ராபர்ட், SSTA மாநில பொதுசெயலாளர் மேலும் இப்புத்தாண்டில் ஆசிரியர்களின் குறைகளை கடந்தாண்டை போல தொடர்ந்து களைந்து கொடுக்க பணிந்து கேட்டுக்கொள்ளப்பட்டது. என்றும் ஆசிரியர்களுக்கான SSTA .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி