இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2015

இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்.


ஐக்கிய நாடுகள்: பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசியநாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்பது இந்தியா தான்.கடந்த 2000 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளில், 1.6 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

புள்ளி விவரம்:

’யுனெஸ்கோ’ எனப்படும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு மற்றும் ’யுனிசெப்’ எனப்படும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2000 - 2012வரை, தெற்காசியாவில், பள்ளி செல்லா குழந்தைகளாக இருந்தவர்களில், 2.3 கோடிபேர், பள்ளிகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர்; அவர்களில், 1.6 கோடி பேர்இந்திய குழந்தைகள் என்பது மகிழ்ச்சியான செய்தி. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பிற முக்கிய தகவல்களாவன:
* இந்தியாவில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இன்னமும், 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமலேயே உள்ளன.* உலகில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு, சிறிய நாடுகளின் பங்களிப்பு தான் அதிகம்.
* அல்ஜீரியா, புருண்டி, கம்போடியா, கானா, இந்தியா, ஈரான், மொராக்கோ, நேபாளம் போன்ற, 42 நாடுகளில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, இந்த, 12 ஆண்டுகளில், பாதியளவு குறைந்துள்ளது. 10 சதவீத சிறுமியர்
* எனினும், 2012ல், உலகம் முழுவதும் உள்ள சிறுவர், சிறுமியரில், 8 சதவீத சிறுவர்களும், 10 சதவீத சிறுமியரும் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். அதாவது, 5.8 கோடி சிறுவர்; 3.1 கோடி சிறுமியர். இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதுகட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பது,உண்மையில் அதிர்ச்சிகரமான தகவலே.

குறைப்பது எப்படி?
பள்ளி செல்லும் வயதில், பள்ளிகளில் காலடி எடுத்து வைக்காமல் உள்ள குழந்தைகளை ஈர்க்கும் விதமாக, பல வித திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, யுனிசெப் அறிவுறுத்தியுள்ளது.
* பள்ளிகளில் கட்டணங்கள் இருக்கக் கூடாது.
* பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும்.
* குழந்தைகளின் பெற்றோருக்கு, பண உதவி வழங்கலாம்.

1 comment:

  1. அதாவது பெற்றோர்கள் மத்தியில் விழிப்பபுணர்வு மட்டுமே அதிகரித்துள்ளது, சரியான கல்வியறிவுடன் பள்ளிபடிப்பை முடிக்கிறார்கள் என்றால் நம்மிடம் அதற்க்கு பதில் உள்ளதா???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி