ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2015

ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு


தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணியிட மாறுதல்

தர்மபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் ஆசிரியர் பயிற்றுனர்களாக மொத்தம் 140 பேர் பணிபுரிகிறார்கள். இவர்களில் 90 பேர்பெண்கள். இவ்வாறு பணிபுரிபவர்களுக்கு மாநில அளவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுகவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டது.இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிபவர்களில் 110 பேருக்கு வெளிமாவட்டங்களில் பணிமாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பணிமாறுதல் ஆணையை பெற ஆசிரியர் பயிற்றுனர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் திடீர் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று மாலை திரண்டனர்.இதுதொடர்பாக ஆசிரியர் பயிற்றுனர்கள் தரப்பில் கூறியதாவது:–

நலன் பாதிக்கப்படும்

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இந்தநிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிவர்களுக்கு உரிய சம்பளம் அளிக்க நிதிஇல்லை எனக்கூறி வேறு மாவட்டங்களுக்கு பணியிட இடமாறுதல் ஆணையை பெற அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை ஏற்றுக்கொண்டு பின்னர் அங்கிருந்து டெபுடேசன் முறையில் இந்த மாவட்டத்தில் தொடர்ந்து பணியாற்றுமாறு தெரிவிக்கிறார்கள். இவ்வாறு பணி இடமாறுதல் வழங்குவதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் பணியாளர்களின் உரிமை மற்றும் நலன் பாதிக்கப்படும். எனவே இந்த மாவட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு வேறு மாவட்டங்களில் அதிகமாக உள்ள நிதியை பெற்று சம்பளம் வழங்கவும், இந்த மாவட்டத்திலேயே தொடர்ந்து பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி