ஓவிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்; நிதியின்றி பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2015

ஓவிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்; நிதியின்றி பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் சார்பில், மாவட்ட அளவில்ஓவிய ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் நேற்று துவங்கின. நிதி பற்றாக்குறையின் காரணமாக, இப்பயிற்சி வகுப்பில், பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள, மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்புகள், நேற்று துவங்கின. முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமைவகித்து துவக்கிவைத்தார்.இதில், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், இளங்கோவன், 'ஓசை' காளிதாஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று, சிறப்புப் பயிற்சிகளை அளித்தனர். இதில், மாணவர்களுக்கு வண்ணங்கள் மீதுள்ள ஈர்ப்பு, வண்ணங்களின் பரிணாம வளர்ச்சி, இயற்கையில் கொட்டிக்கிடக்கும் கற்பனை வளங்கள், கட்டடகலையில் வளரும் ஓவியம் என பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் நடந்தன.இதில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில்,, ௮௨ ஓவிய ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சி வகுப்புகளுக்கு, ௩௫ ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பகுதி நேர ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை.கோவை மாவட்டத்தில், ௨௩௬ பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு ஓவிய கலையை பகுதி நேர ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். இந்நிலையில், பயிற்சி வகுப்பில் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல என அவர்கள் தெரிவித்தனர்.ஓவிய ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆண்டு, மூன்று நாட்கள், உண்டு உறைவிட பயிற்சி முகாம், சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. தற்போது, நிதி பற்றாக்குறையால் இம்முறை கைவிடப்பட்டுள்ளது. மேலும், பகுதி நேர ஆசிரியர்கள்தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்' என்றார்.கோவை மாவட்ட அளவில் கலை ஆசிரியர்களுக்கான, சிறப்பு பயிற்சிகள் நாளை முதல் ௨௩ம் தேதி வரை நடக்கிறது.

இதில், ௧௧௧ ஓவிய ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாடவாரியாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநில அளவில் ஓவிய ஆசிரியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் பயிற்சிகள் நடந்தது.அதன் தொடர்ச்சியாக, மாவட்ட அளவில், நாளை துவங்கவுள்ளது.இதில், எழுத்தாளர் நாஞ்சில் நாதன் கலையின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களும், எழுத்தாளர் இளங்கோவன் கோவையும் கட்டட கலை வளர்ச்சியும், ஓசை காளிதாஸ் சுற்றுசூழல் அழகு, ஓவியர் இளங்கோவன் புகழ்பெற்ற ஓவியர்களின் யுத்திகள் குறித்தும் பயிற்சி அளிக்கவுள்ளனர்.மாநில அளவிலான பயிற்சி பெற்ற, கருத்தாளர்கள் ராஜகோபால், உதவி கருத்தாளர்கள் சந்திரசேகர் மாணவர்களுக்கு ஓவியம் சார்ந்த பயிற்சிகளை புதுவிதமாக வழங்குவது குறித்து, ஆர்வத்தை அதிகரிக்கவும் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி