மேல்நிலைக் கல்விக்கு எந்தப் பாடத்திட்டம்? - மாணவர்களிடையே குழப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2015

மேல்நிலைக் கல்விக்கு எந்தப் பாடத்திட்டம்? - மாணவர்களிடையே குழப்பம்

தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளி மாணவர் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும். புதிய தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டத்தை, கல்வித்துறை தயாரித்து வெளியிடுகிறது.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2க்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, இந்தாண்டு பிளஸ் 1க்கு புதிய பாடப் புத்தகங்கள் வெளியாக வேண்டும். அடுத்த கல்வியாண்டில், பிளஸ் 2க்கு புதிய பாடத் திட்டம் அமலாக வேண்டும். இதற்காக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாட வாரியாக வல்லுனர் குழுவை அமைத்தது.
அக்குழு, 25 பாடத் தலைப்புகளில் வரைவு பாடத் திட்டத்தை தயாரித்தது. கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என, பல தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு, தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே, பாடப்புத்தகம் அச்சடிக்கப்பட்டு, வரும் கல்விஆண்டில் வழங்க முடியும்.
இதற்கான ஒப்புதல் கேட்டு, லோக்சபா தேர்தலுக்கு முன், அரசுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், புதிய பாடத்திட்டம் வருமா, பழைய பாடத்திட்டமே தொடருமா என்ற குழப்பம், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் களிடையே ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி