விண்ணப்பங்கள் வரவேற்பு : முதலமைச்சர் மாநில இளைஞர் விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2015

விண்ணப்பங்கள் வரவேற்பு : முதலமைச்சர் மாநில இளைஞர் விருது


தமிழகத்தில், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு சுதந்திர தினத்தன்று “ முதலமைச்சர் மாநில இளைஞர் விருது “ இந்த ஆண்டு முதல் வழங்கப்படவுள்ளது.

இந்த விருது ரூ.50 ஆயிரம்ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்று ம் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்படவுள்ள விருதுக்காக விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.அதன்படி, 15 வயது முதல் 35 வயதிக்குட்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப் பபடிவம் மற்றும் இதர விவரங்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட விளையாட்டு பிரிவு அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி