TNTET-2013: இணையத்தில் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு டிஆர்பி தேர்ச்சிசான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2015

TNTET-2013: இணையத்தில் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு டிஆர்பி தேர்ச்சிசான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இணையதளத்தில் தேர்ச்சிசான்றிதழை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்யாதவர்களுக்கு இம்மாத இறுதியில் சான்றிதழ் வழங்க டிஆர்பி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் என அரசு அறிவித்தது.

இதையடுத்து கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டில் டிஆர்பி சார்பில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. 2012ல் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவ ருக்கும் பணி வழங்கப்பட்டது.2013ம் ஆண்டில் 6.6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். 2013 நவ.5ல் வெளியான தேர்வு முடிவில் 27 ஆயிரம் பேர், மீண்டும் ஜனவரி 10ம் தேதி விடைகளில் மாறுதல் செய்ததில் 2,300 பேர் தேர்ச்சி பெற்றனர்.மேலும் 43 ஆயிரம் பேர் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்வாகினர்.

2013 தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்த (முதல் மற்றும் 2ம் தாள்) அனைவருக்கும் தேர்ச்சி சான்றிதழ், ஓராண்டு கழித்து கடந்த செப்டம்பரில் டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.சில நாட்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்யும் வகையிலேயே சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.இதனால் தேர்ச்சி சான்றிதழை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. மீண்டும் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சான்றிதழை பதிவிறக்கம் செய்யாதவர்களுக்காக, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக, இம்மாத இறுதியில் சான்றிதழ் வழங்க டிஆர்பிசார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது குறித்து டிஆர்பி அலுவலர் ஒருவர் கூறுகையில், “இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு வழங்க தற்போது சான்றிதழ் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.இம்மாத இறுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சான்றிதழ் வழங்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்” என்றார்.

14 comments:

  1. இன்று தன்னம்பிக்கை கடவுள் சுவாமி விவேகானந்தரின் 152 வது பிறந்தநாள் எனவே அனைவரும் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்

    சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக. கொண்டாடப்படுகிறது
    எனவே அனைவரும் இன்றைய நாளை மகிழ்சியான நாளாக மாற்றுங்கள்

    சுவாமி விவேகானந்தரைப் போல் பலர் இந்த பூமியில் உருவாக வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்

    நன்றி

    ReplyDelete
  2. இன்று 12.01.15 தனது மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடும் TET, கல்வி செய்தி வலைதளம் மூலம் அறிமுகமான சகோதரி மஞ்சுளா அவர்களின் தவப்புதல்வன் குட்டி விவேகானந்தர் மதேவ் சாய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Akilan adw case eppo mudiyum atha kettu vanthigala

      Delete
    2. பொங்கல் முடிந்து வரும்19.01.15 முதல் 23.01.15 க்குள் ஆதிதிராவிட ,கள்ளா் நலத்துறை பள்ளி நியமனம் தொடா்பான வழக்கு தள்ளுபடி ஆகிவிடும் என்று ஆதிதிராவிட நலத்துறை இயக்குனா் கூறியுள்ளாா்

      Delete
  3. Replies
    1. பிப்ரவரி பணி ஆணை 2014 பண்டிகை பணம் உண்டா


      Delete
  4. அரசு உதவிபெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் வேண்டுமா?
    தொடர்புக்கு kathir202020@gmail.com

    ReplyDelete
  5. where is the placement sir,please replay me,i got 82 marks

    ReplyDelete
  6. TNTET 2013 Certificate 5% eduthavangalukum kodupangala frendz plz reply

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  7. I think no Mam. They provide more than 90.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி