TRB போட்டித்தேர்வு கேள்வித்தாள் கோவை வந்தது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2015

TRB போட்டித்தேர்வு கேள்வித்தாள் கோவை வந்தது


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், நடக்கவுள்ள முதுகலை பட்டதாரிஆசிரியர் போட்டித்தேர்வுக்கான கேள்வித்தாள் கோவை வந்தது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில்,
தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான (2013-- -14, 2014---15) போட்டித்தேர்வுகள், ஜன., 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கிறது. கோவை மாவட்டத்தில், 19 மையங்களில், 7500 பேர் தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.இத்தேர்வுக்கான, பணிகள் கோவையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், தேர்வு மையங்கள் ஆய்வு, மைய பொறுப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களை தேர்வு செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கேள்வித்தாள்கள் கோவைக்கு வந்தன.

இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வணிகவியல் உட்பட பாடவாரியாக கேள்வித்தாள் கட்டுக்கள் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில், காவல்துறையின்பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு, குறிப்பிட்ட சில அலுவலர்கள், அதிகாரிகள் தவிர பிறர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி