அரசு பொதுத் தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற எளிமையாக பாடம் நடத்துவது குறித்து அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியுடன் கூடிய வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 1986-ல் விருதுநகர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட காலம் முதல் 2010-11-ம் ஆண்டு வரை 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் பெற்றுவந்த விருதுநகர் மாவட்டம், 2011-12-ல் 93.50 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தையும், 2012-13-ல் 94.93 சதவீதம் தேர்ச்சிபெற்றுமாநில அளவில் 5-ம் இடத்தையும், கடந்த ஆண்டு 96.55 சதவீதம் தேர்ச்சிபெற்று மாநில அளவில் 4-ம் இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 326 பள்ளிகளைச் சேர்ந்த 15,271 மாணவர்கள், 14,908 மாணவிகள் என மொத்தம் 30,179 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 14,486 மாணவர்களும், 14,653 மாணவிகளும் என மொத்தம் 29,139 பேர் தேர்ச்சிபெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.86. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.20 ஒட்டுமொத்த தேர்ச்சி96.55 சதவீதமானது.அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டில் 10-ம் வகுப்பு மாணவர் களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்களை நடத்துவது தொடர்பாக மொழிப்பாட ஆசிரியர்கள் தவிர கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட இடைநிலைக் கல்வித் திட்ட அலு வலர்கள் கூறியது: 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் இந்த ஆண்டு முதலிடத்தைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. எனவே, பாடங்களை எளிமையாக மாணவர் கள் புரிந்துகொள்ளும் வகையில் மொழிப் பாடங்கள்தவிர மற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அதற்கான கையேடு களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களுக்கு சுலபமாக நினைவில் கொள்ளும் வகையில் பாடங்கள் கற்றுக்கொடுக் கப்படும். அதன்மூலம் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை அடைய கல்வித் துறை திட்டமிட்டுள்ளது என்றனர்.இதுபோல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் மற்றும் பெற் றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி