எஸ்.ஐ. நேரடி நியமனத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2015

எஸ்.ஐ. நேரடி நியமனத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி


காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு மார்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் இந்திய குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

பொது ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 23-ஆம் தேதியும், காவல் துறை ஒதுக்கீட்டுக்கான எழுத்துத் தேர்வு மே 24-ஆம் தேதியும் நடைபெறும்.984 காலிப் பணியிடங்கள், 94 பின்னடைவுக் காலியிடங்களுக்கு (காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதார்களைக் கொண்டு நிரப்பப்படும்) இந்தத் தேர்வு நடைபெறும்.இந்த காலிப் பணியிடங்களில் உள்ள மொத்த ஒதுக்கீட்டில் காவல் துறைக்கு 20 சதவீதம், விளையாட்டுத் துறைக்கு 10 சதவீதம், சார்ந்துள்ள வாரிசுக்கான ஒதுக்கீடு 10 சதவீதமும் ஆகும்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஜூலை 1-ஆம் தேதியின்போது 20 வயது நிறைவு பெற்றவராகவும், 28 வயது நிறைவு பெறாதவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம், தேர்வு முறைகள், இட ஒதுக்கீடு, வயது உச்ச வரம்பு தளர்வு, தகுதிகள், கல்வித் தகுதிகள் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.tnusrbexams.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள், நேர்காணல் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி