பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 4 புதிய மையங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2015

பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 4 புதிய மையங்கள்


பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வுக்கு நடப்பு ஆண்டில் மேலும் 4 புதிய மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியது:

பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வுக்கான செய்முறை பயிற்சி தேர்வுகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. எழுத்துத் தேர்வுக்கான விடைத்தாள்களும் அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன.விடைத்தாளில் மாணவ, மாணவிகளின் புகைப்படம், பார் கோடு, படிக்கும் பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை நடப்பு ஆண்டில் 26 ஆயிரத்து 947 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

ஈரோடு கல்வி மாவட்டத்தில் 36 தேர்வு மையங்களும், கோபி கல்வி மாவட்டத்தில் 37 மையங்களும் உள்ளன. இந்த ஆண்டு ஈரோடு கல்வி மாவட்டத்தில் எலவமலை கிரேஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி என 2 மையங்களும், கோபி கல்வி மாவட்டத்தில் கல்கடம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி என 2 மையங்களும் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன.கடம்பூர், வெள்ளித்திருப்பூர் மையங்கள், கடம்பூர், பர்கூர் மலைப் பகுதி மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பின்பற்றப்பட்டதேர்வு நடைமுறைகளே இந்த ஆண்டிலும் பின்பற்றப்படும். இந்த ஆண்டு தேர்வுக்கு முன்பு 5 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மொழி பாடத் தேர்வுகளை எழுதும்போது கோடு போட்ட விடைத்தாள்கள் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி