ஓய்வூதியம் பெறுவோர் பிப்.18-க்குள் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

ஓய்வூதியம் பெறுவோர் பிப்.18-க்குள் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம்


தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றி மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும்மேல் ஓய்வூதியம் பெறுவோர், பிப்.18ஆம் தேதிக்குள் சார் நிலை கருவூலங்களில்வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு மூலம் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறும் 58 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள், ரூ.25 ஆயிரத்து 500-க்கும் மேல்ஓய்வூதியம் பெறும் 60 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள், ரூ.41 ஆயிரத்து 500-க்கும் மேல் ஓய்வூதியம் பெறும் 80 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது 2014-15ஆம் ஆண்டுக்கான வருமான வரி படிவத்தை வரி சேமிப்பு ஆதாரங்களை இணைத்து பிப்.18ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சார் நிலை கருவூலங்களில் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி