குறுகிய கால கணினிப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

குறுகிய கால கணினிப் பயிற்சி


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் அளிக்கப்படும் குறுகிய கால கணினிப் பயிற்சி வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.அய்யம்பெருமாள் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணவர்கள், பொதுமக்கள் கணினிப் பயிற்சி பெறும் வகையில் "கணிப்பொறி அறிதல்' சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில்,விண்டோஸ் இயக்க முறை, எம்.எஸ்.ஆபிஸ் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்பு வரும் 25-ஆம் தேதி தொடங்கி, 15 நாள்கள் நடைபெறும்.மேலும் தகவல்களுக்கு 044- 24410025, 24402894, 24915250 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி