தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2015

தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி


தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள்மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர்ஆசிரியர்கள்.
தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கைசரிந்துகொண்டே வருகிறது. பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008--09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43.67 லட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து, 2012-13ம் ஆண்டில் 36.58 லட்சமானது. அதேபோன்று, நடுநிலைப்பள்ளிகளில், 50.46 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45.3 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த இரு கல்வியாண்டுகளில், மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. கடந்த, 2008-09ல் 34.5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45.4 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறை வால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ, 1500 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், 11 ஆயிரம் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், படிப்படியாக 2000 பள்ளிகளை, அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கான ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில செயலர் ராபர்ட் கூறியதாவது: அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள், கல்வித்துறையில் அவசியம். மறைமுகமாக, பல்வேறு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது சுமார், 2000 பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், மூடுவிழாவை எதிர்நோக்கியுள்ளன. பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவதற்கான காரணத்தை ஆராய்ந்து அதனை சரிசெய்யாமல், பள்ளிகளை மூடும் செயல்பாடுகளால், எதிர்காலத்தில், கல்வி முற்றிலும் தனியார் வசம் போகும் நிலை ஏற்படும். இவ்வாறு, ராபர்ட் தெரிவித்தார்.

6 comments:

  1. SEITHIGAL MULUMAIYAAGA :TAMILAGATHIL 2000 ARASU PALLIGAL VIRAVIL MOODAL MEENDUM 200 TASMAC KADAIGAL THIRAKAPPADUKINDRANA.MAKKAL ANAIVARUM VANTHU KASU KODUTHU ENGALAIYUM UNGALAIYUM VAALAVAIKA VENDUKIROAM.

    ITHUTHANNA MUNETRAM. ITHUTHANNA NAGARIGA VALZKAI MURAI. NALLA KALIGALAMADA ............

    ReplyDelete
  2. அந்நிய மொழி மோகமே இந்நிலைக்குக் காரணம். தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் வழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தவிட்டால், அரசுப் பள்ளிகளின் மதிப்பு கூடிவிடும். பள்ளிகளை மூடும் நிலையும் ஏற்படாது.

    ReplyDelete
    Replies
    1. National Curriculum Framework
      for Teacher Education; நம்முடைய குறிக்கோள் இன்னும் பத்து வருடங்களில் உலகளவில் உயர்நிலை பள்ளிகளின் தகுதியை பெற்றுவிட வேண்டும் என்று இது பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.

      அந்நிய மொழி மோகம் என்று மாயை காரணங்களை கூறி, நம் தகுதியை குறுகிய வட்டத்துக்குளை அடைத்து விடாதீர்கள்.

      Delete
  3. பள்ளிகளில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் PTA,VEC,SMC கூட்டங்கள் மற்றும் முக்கிய விழாக்களில் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கினால் நிச்சயம் மாபெறும் மாறுதல் நிகழாவிட்டாலும் சிறிதளவாயினும் சேர்க்கை கூடும்.இது திண்ணம்.

    ReplyDelete
  4. பள்ளிகளில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் PTA,VEC,SMC கூட்டங்கள் மற்றும் முக்கிய விழாக்களில் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கினால் நிச்சயம் மாபெறும் மாறுதல் நிகழாவிட்டாலும் சிறிதளவாயினும் சேர்க்கை கூடும்.இது திண்ணம்.

    ReplyDelete
  5. TET passed SCA paper 2 social science aided school in Tiruneveli dist ph 8056817432

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி