சிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2015

சிறப்பு பட்டதாரி ஆசிரியர் 200 பேரை நியமிக்க ஆணை


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியருக்கு பாடம் சொல்லித்தரும் வகையில் புதிதாக 202 சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு உயர்நிலை,மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய இடைநிலை கல்வித் திட்டத்துக்காக அரசு ரூ. 5.35 கோடி ஒதுக்கி 202 சிறப்பாசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று 2014ல் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பினார்.

அதில், அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் சுமார் 2,178 மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கல்வி கற்பிக்க கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தேவை. மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் 202 சிறப்பு பி.எட் ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9,300-34,800+ தர ஊதியம் ரூ.4,600 ஊதிய விகிதத்தில் தோற்றுவிக்கலாம், அந்த பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப ஆணை வழங்க கோரியிருந்தார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலித்த அரசு அதனை ஏற்று மேற்கண்ட 202 சிறப்பு பி.எட் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து ஆணையிடுகிறது. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

8 comments:

  1. Hi all friends good morning. யாராவது கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார். சுப்ரீம் கோர்ட் வழக்கு என்னாச்சு. Above 90 க்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? வழக்கு விசாரனை என்னாச்சு. தீர்ப்பு எப்போது வரும்? Government என்ன சொல்லுது. TRB என்ன சோல்லுது. Please anybody tell me sir.

    ReplyDelete
    Replies
    1. Dear Sankar Sir, Don't expect from TRB, Courts, TN Govt, Education Department, all are played our life......

      Game over.............

      Nothing is happen in our life.....

      Please considerations in your earnings other way.........

      Delete
    2. வலியோடு போராடினால் தான்,
      ஒரு பெண் தாயாக முடியும்.......

      இருளோடு போராடினால் தான்,
      புழு வண்ணத்துப்பூச்சியாக முடியும்,

      மண்ணோடு போராடினால் தான்,
      விதை மறமாக முடியும்..............

      வாழ்க்கையோடு போராடினால் தான்,
      நீ வரலாறு படைக்க முடியும்

      Delete
  2. What about the vacancy of this academic year 2014-2015. But the pg selection process over for this academic year. What about BT?

    ReplyDelete
    Replies
    1. Alexander Solomon sir, please clarify sir

      Delete
    2. Dear Chandru Theni,

      The supreme court has made the State Government to fold the hands. As and when Judgement is proclaimed, the Government would start the process for recruiting teachers for the year 2014-15

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி