பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2015

பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு.


மதுரை உட்பட ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன், பிளஸ் 2 தேர்வுப் பணிகள் குறித்து தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் ஆய்வு செய்தார்.மதுரை வந்த அவரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் அவர் பேசியதாவது: மார்ச் 5ல் துவங்கும் பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் ஏற்படக்கூடாது. விடைத்தாள்களுடன் முதல் பக்கத்தை இணைக்கும் பணிகள் தற்போது முடிந்துள்ளன.அச்சு படிவம் கொண்ட முதல் பக்கத்தில் ஏதாவது எழுத்து பிழை இருந்தால் அதை பேனாவால் தற்காலிகமாக திருத்தி ஹால் டிக்கெட்வழங்கும்போது, தெளிவாக எழுத வேண்டும். ஹால் டிக்கெட்டுகளில் இடம் பெறும் தகவல்கள்தான் மதிப்பெண் சான்றிதழிலும் இடம் பெறும். அதிகாரிகள் கவனத்துடனும், பதட்டமில்லாமலும் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி