தமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளுக்கு, கல்விக் கட்டணம் நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி குற்றிகாட்டுவிளையை சேர்ந்த ராஜாசிங் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கல்விக் கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வி கட்டண வரைமுறைச் சட்டம் ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டங்களை பின்பற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என ஒரு வழக்கில் ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.ஐ.சி.எஸ்.இ.,பாடத் திட்டப்படி கற்பிக்கும் பள்ளிகளுக்கு இதுவரை அரசு கல்விக் கட்டணம் நிர்ணயிக்காததால் விருப்பம்போல் வசூலிக்கின்றனர். கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட பின் அப்பள்ளிகள் விதிகளை பின்பற்றி கட்டணம் வசூலிக்கின்றனவா? என கண்காணிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு தனி அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது. மனுதாரர் வக்கீல் ஈ.வி.என். சிவா ஆஜரானார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி