பிளஸ் 2 தேர்வு நடைமுறை மாணவர்களுக்கு அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2015

பிளஸ் 2 தேர்வு நடைமுறை மாணவர்களுக்கு அறிவுரை


பொதுத்தேர்வின்போது வினாத்தாளை சேதப்படுத்துவது, கிழிப்பது போன்றசெயல்களில் ஈடுபடக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச் 5ல், பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது; 11.20லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இம்முறை மொழிப்பாட தேர்வுக்குகோடு போட்ட விடைத்தாள் வழங்கப்படுகிறது.
பொதுத்தேர்வு எழுதும் முறை குறித்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கருப்புமற்றும் நீல நிற மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற நிற மை பேனாக்களை பயன்படுத்தக்கூடாது. முகப்பு தாளில் மட்டுமே மாணவர் கையெழுத்திட வேண்டும்;மற்ற எந்த தாளிலும் பெயர், குறியீடு, தேர்வு எண் என எதுவும் எழுதக்கூடாது.வினா எண்களை தவறாமல், விடைத்தாளில் எழுத வேண்டும். கலர் பென்சில், ஸ்கெட்ச் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் 20 முதல் 25 வரிகள் மட்டுமே எழுத வேண்டும். வினாத்தாளை சேதப்படுத்துவது, கிழிப்பது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது, என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி