"தயாராகும் சந்திரயான்- 2' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2015

"தயாராகும் சந்திரயான்- 2'

சந்திரயான் - 2 திட்டப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானியும், மங்கள்யான் திட்ட ரேஞ்ச் ஆபரேஷன் திட்டத்தின் இயக்குநருமான எம்.எஸ். பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மங்கள்யான் 2013ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அது சரியான பாதையில் கடந்து சென்று கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி செவ்வாய்க் கிரகத்தின் மேல் பரப்பில் நிலை நிறுத்தப்பட்டது. முதல் முயற்சியிலேயே இந்தியா இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இப்போது மங்கள்யான் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து அங்குள்ள தாதுக்கள், பிராணவாயு, நீர், மனிதன் இறங்கக் கூடிய சூழல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறது. இது 6 மாதங்கள் செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வை மேற்கொள்ளும்.

இப்போது சந்திரயான் - 2 திட்டப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 2017-ல் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சந்திரனில் ரோவார் தானியங்கி வண்டி சந்திரனில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும். ஆய்வின்போது உள்ள சந்திரனில் உள்ள தாதுக்கள், அங்குள்ள உறைந்த பனி, தண்ணீர், பிராண வாயு குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி