பிளஸ் 2 தேர்வு தனித் தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்!' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2015

பிளஸ் 2 தேர்வு தனித் தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்!'

'தத்கல்' திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும், 'ஹால்டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு:

மார்ச் மாதம் நடக்கும் பிளஸ் 2 தேர்வு எழுத, 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று மற்றும் நாளை, www.tndge.in என்ற இணையதளத்தில், தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தேதிகள் பற்றிய விவரங்கள் குறித்து, தனித் தேர்வர்கள், ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ள தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே உரிய நேரத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத, ஆன் - லைனில் விண்ணப்பித்து, ஹால்டிக்கெட்டை இதுவரை பதிவிறக்கம் செய்யாத தனித் தேர்வர்களும், இணையதளத்தில் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி