வனச்சீருடை பணியாளர் தேர்வு: தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பேர் பங்கேற்பு - கேள்வித்தாளில் குழப்பம்; தேர்வர்கள் அதிருப்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2015

வனச்சீருடை பணியாளர் தேர்வு: தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பேர் பங்கேற்பு - கேள்வித்தாளில் குழப்பம்; தேர்வர்கள் அதிருப்தி.


தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற வனச்சீருடை பணியாளர் தேர்வில் 35 ஆயிரத்து 695 பேர் பங்கேற்றனர்.சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய 6 ஊர்களில் 190 மையங் களில், காலை, மாலை என இரு தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வுக்காக 59 ஆயிரத்து 262 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 35 ஆயிரத்து 695 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.இத்தேர்வின் கேள்வி பதில்களில் குழப்பம் இருந்ததாக இதில் பங்கேற்றவர்கள் கூறினர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, “பொது அறிவு வினாத்தாளில் தமிழகத்தின் மாநில மலர் எது என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதற்கான விடை செங்காந்தள் மலர். ஆனால் இப்பெயர், கொடுக்கப்பட்ட 4 விடைகளில் இடம்பெறவில்லை.அதே போல மற்றொரு கேள்வி யில் இரு நபர்களுக்கு இடையி லான உறவு தொடர்பான கேள்வி இடம்பெற்றிருந்தது. அதில் ஆங்கி லத்தில் உள்ள கேள்விக்கும், தமிழில் உள்ள கேள்விக்கும் வெவ்வேறு விடைகள் வருகின்றன. இதுபோன்ற கேள்விகளால் குழப்பம் ஏற்பட் டது. நாங்கள் 4 விடைகளில் ஒன்றை குறிப்பிட்டுள்ளோம். இதற்கு எவ் வாறு மதிப்பெண் வழங்குவார்கள் என்பது தெரியவில்லை” என்றனர்.

அதிகாரி விளக்கம்

இது குறித்து வனச்சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:கேள்வித்தாள் தொடர்பாக எங் களுக்கு எந்த புகாரும் வரவில்லை. அடுத்த 5 நாட்களுக்குள் விடை களை இணையதளத்தில் வெளியிடுவோம். அப்போது தேர்வு எழுதியவர்களுக்கு குழப் பம் ஏற்பட்டால், சென்னை பனகல் மாளிகையில் உள்ள வனச்சீருடை பணியாளர் தேர் வுக் குழு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்.tnfusrc.tnchn@tn.nic.in என்ற இமெயில் முகவரியிலும் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்யும். வினாத்தாளில் பிழைகள் இருப்பின், யாருக்கெல்லாம் மதிப்பெண்கள் வழங்கலாம் என்பது குறித்து வல்லுநர் குழு வழிகாட்டுதல் படி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி