தமிழ்நாடு அனைத்துத் துறை அரசுப் பணியாளர் சங்கங் களின் கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம், அமைப்பாளர் பால்பாண்டியன் தலைமையில் நேற்று தஞ்சையில் நடைபெற்றது.கூட்டத்துக்குப் பின்னர், அகில இந்திய அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் கு.பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி:
அரசு ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 21-ம் தேதி அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.ஆனாலும், அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன் வரவில் லை. இதனால், அடுத்த கட்டமாக மார்ச் 21-ல், 8 மண்டலங்களில் பேரணி நடைபெறும்.
இதேபோல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் இணைந்த சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 4, 5-ம் தேதிகளில் சென்னையில் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம்.தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டமும், அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.எனவே, வரும் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை நியாய விலைக்கடை பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி