தெலுங்கனா மாநில அரசு ஊழியர்களுக்கு 43 சதவீதம் சம்பள உயர்வு அளிப்பதாக முதல்வர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2015

தெலுங்கனா மாநில அரசு ஊழியர்களுக்கு 43 சதவீதம் சம்பள உயர்வு அளிப்பதாக முதல்வர் அறிவிப்பு.


ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.தெலுங்கான முதல், முதல்–மந்திரியாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ்இருந்து வருகிறார்.
புதிய மாநிலம் என்பதால் அரசு ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சந்திரசேகர ராவ் கோரிக்கை விடுத்திருந்தார்.அதை ஏற்று தெலுங்கானாவில் உள்ள சுமார் 3½ லட்சம் அரசு ஊழியர்கள் தினமும் கூடுதலாகஒரு மணி நேரம் பணியாற்றி வருகிறார்கள்.

இதனால் தெலுங்கானா மாநிலத்தின் வருவாய்உயர்ந்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சம்பள மறுஆய்வு குழுவும்,தெலுங்கானா அரசு ஊழியர்களின்சம்பளத்தைஉயர்த்த பரிந்துரை செய்தது.முதல்–மந்திரி சந்திரசேகர ராவ் அதை ஏற்றுக்கொண்டு, அரசு ஊழியர்களுக்கு 43 சதவீதம் சம்பள உயர்வு அளிப்பதாக நேற்று அறிவித்தார்.

தெலுங்கானா மாநிலம் உருவாக அரசு ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றிதெரிவிக்கும் வகையில் இந்த சம்பள உயர்வு கொடுக்கப்படுவதாக சந்திரசேகர ராவ்கூறினார்.இந்த 43 சதவீத சம்பள உயர்வு கடந்த ஜூன் மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். சம்பள நிலுவைத்தொகை 8.5 சதவீத வட்டியுடன் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படும்.சந்திரசேகர ராவ் அறிவிப்பு காரணமாக தெலுங்கானாவில் உள்ள 3½ லட்சம் அரசுஊழியர்கள் அடுத்த மாதம் முதல் கூடுதல் சம்பளம் பெறுவார்கள். இதனால் தெலுங்கானா மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,500 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி