அய்யா வைகுண்டர் அவதார விழா: நெல்லை மாவட்டத்துக்கு 4–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2015

அய்யா வைகுண்டர் அவதார விழா: நெல்லை மாவட்டத்துக்கு 4–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு


சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 4–ந் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறி இருப்பதாவது:–

உள்ளூர் விடுமுறை:

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு வைகுண்டசாமியின் பிறந்தநாள் விழா, வருகிற 4–ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வுகள் நடைபெறும்

அந்த நாளில் தேர்வுகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது.உள்ளூர் விடுமுறையன்று பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தப்படும் முக்கிய தேர்வுகள் நடைபெறும்.நெல்லை மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களில் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு, அவசரப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

14–ந்தேதி வேலை நாள்

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த மாதம் (மார்ச்) 14–ந் தேதி (சனிக்கிழமை), வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி