உதவிப் பேராசிரியர் நியமனம்: மேலும் 6 பாடங்களுக்கு பிப்ரவரி 25-இல் நேர்முகத் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2015

உதவிப் பேராசிரியர் நியமனம்: மேலும் 6 பாடங்களுக்கு பிப்ரவரி 25-இல் நேர்முகத் தேர்வு

அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் மேலும் 6 பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகின்றன. கல்வித் தகுதி, பணி அனுபவத்துக்கு விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். கணிதம், இயற்பியல், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உளவியல், சம்ஸ்கிருதம், சமூகவியல், காட்சித் தகவலியல், இந்திய கலாசாரம், மனித உரிமைகள் ஆகிய பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் தனித்தனியே அனுப்பப்படும் எனவும், இணையதளத்திலும் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

3 comments:

  1. LET US PRAY THAT WRITTEN TEST FOR COLLEGE ARTS TRB SHOULD BE CONDUCTED.

    ReplyDelete
  2. I ve already started praying.God will help us.

    ReplyDelete
  3. I am also praying God will Help Us. Because I Had only UGC Net without experience.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி