அரசுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், '104'ல் ஆலோசனை பெறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும், 650 பேர் வரை ஆலோசனை பெறுகின்றனர்.
தமிழகத்தில், அவசர கால, 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது போல், தொலைபேசி வழியேமருத்துவ உதவிகள், மன நல ஆலோசனைகள் பெற, '104' மருத்துவ சேவை பயன்பாட்டில்உள்ளது. இதற்கு, மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு உள்ளது. அரசு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், தேர்வு பயம் போக்க, மனநல ஆலோசனை பெற, '104' உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என, அரசுஅறிவித்து உள்ளது. தற்போது, மாணவர்கள் இந்த மையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே நாளில், 650 மாணவர்கள், தேர்வு பயம் போக்க ஆலோசனை பெற்றுள்ளனர்.
சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபு தாஸ் கூறியதாவது:தேர்வு நேரம் நெருங்கு வதால், பல மாணவர்களுக்கு ஒரு வித பயம் தொற்றிக் கொள்கிறது. அவர்களுக்கு, '104' உதவி மையம் நல்ல தீர்வாக உள்ளது. சராசரியாக, தினமும், 650 மாணவர்கள் ஆலோசனை பெறுகின்றனர். நேற்று முன்தினம், அபுதாபியில் இருந்து டாக்டர் ஒருவர், பிளஸ் 2 தேர்வு எழுதும் தன் மகனுக்கு, ஆலோசனை கொடுக்கும் படி அழைத்தார். மாணவர்கள் எந்த நேரத்திலும், இந்த மையத்தை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி