ஆசிரியர் பணி நியமனங்களை வழங்கக் கோரி மாற்று திறனாளி பட்டதாரிகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை டிபிஐ வளாத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை திடீரென திரண்ட மாற்றுத் திறனாளிகள் 100 பேர் பணி நியமனம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நேற்று காலை பரபரப்பு காணப்பட்டது. இது குறித்துமாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் சக்திவேல் கூறியதாவது: ஆசிரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் போக, மீதம் உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கான 1017 இடங்கள் நிலுவையில் இருந்தன. இந்த இடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிக்க 2014ம் ஆண்டு மே 21ம்தேதி சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. அந்த தேர்வில் 5000 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 920 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனங்களை வழங்கவில்லை. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் விளக்கம் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக ஆசிரியர் தேர்வு வாரி யம் தெரிவித்தது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அந்த வழக் கின் விசாரணையில் 702 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 467 பேருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இது வரை பணி நியமனம் செய்யவில்லை. இது தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு கொடுத்தும் நடவடிக்கைஇல்லை. அதனால், மாற்றுத் திறனாளிகள் டிபிஐ வளாகத்தில் உள்ள டிஆர்பி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்த திட்டமிட்டு அமர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Amma.srirangathula nenga ninaichamathiri makkal ungala jeikavachtanga. Nenga ninaicha engalukupg trb second list podalam. Nambikaiudan. Ammavin viswasi
ReplyDeleteungaloda padippukkum unga markukkum respect kodunga sabari sr.... posting kedaikkum....
ReplyDelete