மீன்முள் குத்தி மீனவர் மயக்கம்: இலங்கை கடற்படை மனிதநேயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2015

மீன்முள் குத்தி மீனவர் மயக்கம்: இலங்கை கடற்படை மனிதநேயம்

ராமேஸ்வரம்: நடுக்கடலில், விஷ மீனின் முள் குத்தியதால் பாதிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவருக்கு, இலங்கை கடற்படை வீரர்கள், மனிதநேய அடிப்படையில் மருத்துவ உதவி அளித்தனர்.


கடலில்...:

ராமேஸ்வரத்தில் இருந்து, பிப்., 16ல், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற, தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, குணேந்திரன், 37, என்பவரின் இடது காலில், விஷ மீனின் முள் குத்தி முறிந்தது; அவர், மயங்கி படகிற்குள் விழுந்தார்; உடன் வந்த மீனவர்கள் தவித்தனர். அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், மயக்கமடைந்த மீனவரின் உடலில் இருந்து, முறிந்த மீன் முள்ளை அகற்றி, 'குளுகோஸ்' ஏற்றி முதலுதவி அளித்தனர். பின், ராமேஸ்வரம் கரைக்கு சென்று சிகிச்சை பெறும்படி கூறி அனுப்பினர்.

சித்ரவதை:

முந்தைய ஆட்சியில் கடலில் ரோந்து வரும் இலங்கை வீரர்கள், தமிழக மீனவர்களை தாக்கி, சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர். புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதால், அந்நாட்டு ராணுவ வீரர்கள், மனித நேயத்துடன் மருத்துவ உதவி செய்துள்ளதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

1 comment:

  1. M.A (ACADEMIC YEAR ADDMISSION)-2010-12,B.ED (IGNOU)(CALENDER YEAR)-2011-13 COMPLETED .PG KU ELIGIBLE OR NOT?PLS REPLY

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி