இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான மாதிரி கல்வித் திட்டம் ஒரு மாதத்தில் தயாராகும்: துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2015

இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான மாதிரி கல்வித் திட்டம் ஒரு மாதத்தில் தயாராகும்: துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன்

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளபடி இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான மாதிரி கல்வித் திட்டம் ஒரு மாதத்தில் தயார் செய்யப்பட்டு விடும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார்.

என்.சி.டி.இ.-யும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் இணைந்து சென்னையில் நடத்தி என்.சி.டி.இ. வழிகாட்டுதல் 2014, புதிய கல்வித்திட்டம் குறித்த பயிற்சிப் பட்டறை நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் துணைவேந்தர் விஸ்வநாதன் பேசியது:

புதிய வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ள இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான கல்வித் திட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் மாதிரி கல்வித் திட்டத்தை உருவாக்கி முன்னோடியாகத் திகழ என்.சி.டி.இ. அழைப்பு விடுத்துள்ளது.

எனவே, இதற்கான பணிகளை பல்கலைக்கழகம் உடனடியாகத் தொடங்க உள்ளது. கல்லூரிகள் இதற்கானத் திட்டங்களையும், ஆலோசனைகளையும் செவ்வாய்க்கிழமை முதல் பல்கலைக்கழக மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

அடுத்த ஒரு மாத காலத்தில் இந்த இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான கல்வித் திட்டம் தயார் செய்யப்பட்டு விடும்.

அதே நேரம், புதிய வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில சிக்கல்களை என்.சி.டி.இ.யிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதாவது வைப்புத் தொகையில் சலுகை, படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக என்.சி.டி.இ. தலைவர் சந்தோஷ் பாண்டா உறுதியளித்துள்ளார்.

மேலும், புதிய வழிகாட்டுதல்படி, பி.எட். இரண்டு ஆண்டுகளாக மாறுவதால் கல்வியியல் கல்லூரிகளில் 16 முழு நேர ஆசிரியர்கள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதலாம் ஆண்டு வகுப்புகள் நடைபெறும்போது, அப்போதுள்ள ஆசிரியர்களை வைத்தே வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் எனவும், இரண்டாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்போது பணியிடங்கள் முழு அளவில் நிரப்பப்பட்டுவிட வேண்டும் எனவும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி