போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: சென்னையில் நாளை பேச்சுவார்த்தை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2015

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: சென்னையில் நாளை பேச்சுவார்த்தை


அரசு போக்குவரத்து ஊழியர் களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் நாளை நடக்கிறது. அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத ஊதிய உயர்வு கேட்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த டிசம்பரில் 4 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச அரசு தரப்பில் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதன்படி, அரசு சார்பில் 11 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழுவினர், தொழிற்சங்க பிரதிநிதி களுடன் பேச்சுவார்த்தையை நாளை தொடங்குகின்றனர்.

இதுதொடர்பாக சிஐடியு துணைத் தலைவர் எம்.சந்திரன் கூறும்போது, ‘‘அரசு அமைத்துள்ள குழுவினர், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் 11-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள பணிமனையில் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். பேச்சுவார்த் தையின்போது, 12-வது புதிய ஒப்பந்தத்தில்50 சதவீத ஊதிய உயர்வு, 240 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு உடனடி யாக பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத் துவோம்’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி