போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2015

போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


போலீஸ் சப்–இன்ஸ்பெக் டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடை பெற்று வருகிறது.

இலவச பயிற்சி

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பணித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த 21–ந்தேதி முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடை பெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் எழுத்துத்தேர்வுக் கான பயிற்சிகள் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரையிலும், உடல் தகுதித் தேர்வுக்கான பயிற்சிகள் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெற்று வரு கிறது. இதனை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் ஆகியோர் பார்வை யிட்டனர். இந்தபயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள குறிப்பிடப்பட்டுள்ள உடல் மற்றும் கல்வித்தகுதியுடைய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூட்டரங்கில் உள்ள பயிற்சி ஒருங்கிணைப்பாளரிடம் நேரில் சென்று பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களை 8608682791 மற் றும் 9443882812 என்ற எண் ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி