பொதுத்தேர்வு: மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2015

பொதுத்தேர்வு: மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி


மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 படிக்கும்மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மதுரை மாநகராட்சியில் உள்ள 15 மேல்நிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 2,300 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும், 2,500 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வையும் எழுத உள்ளனர். பொதுத்தேர்வில் மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தவும், அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சிக் கல்வி அலுவலர் (பொறுப்பு)ராஜேந்திரன் கூறியது:பொதுத்தேர்வுகளில், கடந்த 3 ஆண்டுகளாக மற்ற மாநகராட்சிகளைக் காட்டிலும் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாநில அளவில் மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தினமும் காலை 8.30 மணி முதல் காலை 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 வரையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தினமும் தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள் உடனடியாகத் திருத்தப்பட்டு மாணவர்களின் குறைபாடுகள்சுட்டிக்காட்டப்படுகின்றன.

இதன் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளவும், தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு, பொறியியல்-மருத்துவப் படிப்புகளில் சேரும் வகையில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இதன்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியிலும், ஈ.வே.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி