தாமதமாக வந்த பயிற்சி கையேடு:ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

தாமதமாக வந்த பயிற்சி கையேடு:ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

கோவை:பள்ளிகளில், மாதிரி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், ஆசிரியர் பயிற்சி கையேடு வினியோகிக்கப்பட்டு வருவது, ஆசிரியர்கள் மத்தி யில் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் கல்வி இடைநிலைக் கல்வித் திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், ஒன்பது, 10ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு, எளிமையான முறையில் பாடங்களை கற்பிப்பது சார்ந்த, பயிற்சி கையேடு பாடம் வாரியாக வினியோகிக்கப் படும்.

நடப்பு கல்வியாண்டிற்கான பயிற்சிகள், 2014 நவ., மற்றும் டிச., மாதம் நடந்தது. பயிற்சிகளின் முடிவில் வழங்க வேண்டிய கையேடு, தற்போது தான் மாவட்டங்களுக்கு வினியோகிக்கப் பட்டுள்ளது. அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் புத்தகங்கள் வந்துள்ளன.

இதுகுறித்து, 10ம் வகுப்பு ஆசிரியர்கள் கூறியதாவது:

நடப்பு, 2014 - 15ம் கல்வி ஆண்டிற்கான பயிற்சி கையேடு, இப்போது தான் வினியோகிக்கப்பட்டுள்ளது. பாடங்கள் நடத்தும் சமயத்தில் கிடைத்திருந்தால், ஆசிரியர்கள் கற்பித்தலில் சில மாற்றங்களை ஏற்படுத்த வசதியாக அமைந்திருக்கும். ஆனால், பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், பயிற்சி கையேடுகள் வினியோகிப்பதில் பலனில்லை.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி