சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம்

நாமக்கல்:சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்.விரைவில், பிளஸ் 2 பொதுத்தேர்வும், அதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்க உள்ளது. தேர்வுப் பணியை கண்காணிக்க, மாவட்ட வாரியாக, கல்வித் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களின் கண்காணிப்பாளர் பொறுப்பில், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நியமிக்கப்பட்டார்.இந்த நியமனம், ஆசிரியர் மத்தியில் கடும் சர்ச்சையை எழுப்பியது. மேற்கண்ட இரு மாவட்டங்களில், தனியார் பள்ளிகள் அதிகம் இருக்கின்றன. நாமக்கல் மாவட்ட பள்ளிகள், மாநில அளவிலான இடங்களை பிடிக்கின்றன.

இதுபோன்ற சூழலில், குறிப்பிட்ட இரு மாவட்டங்களுக்கான பொறுப்பை, பழனிச்சாமியிடம் வழங்கியது, சர்ச்சையாக மாறியது.இந்நிலையில், நாகை, கன்னியாகுமரி மாவட்ட மேற்பார்வையாளராக பழனிச்சாமி மாற்றப்பட்டு உள்ளார். அந்த மாவட்டங்களின் மேற்பார்வையாளரான, இணை இயக்குனர் நரேஷ், நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி