மதுரையில் ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் குறித்து மதுரை, திண்டுக்கல், தேனி,ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட முதன்மைமற்றும் கல்வி அலுவலர்கள்,தேர்வுத்துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள்,
தலைமையாசிரியர்கள், வினாத்தாள் காப்பாளர்களுடன் ஆலோசனை நடந்தது. தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வினாத்தாள் கொண்டு செல்லும் முறை, இந்தாண்டு முதல் சில பாடங்களுக்கு அமல்படுத்தப்பட்ட கோடிட்ட விடைத்தாள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இயக்குனர் கூறுகையில், ''தேர்வு கையேட்டில் உள்ள சில தவறுகள் தெரிவிக்கப்பட்டது. விரைவில் அது குறித்து திருத்தம் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி