கல்லூரிகளில் கற்பிக்கும் அணுகுமுறைகளில் மாற்றம் அவசியம்: டாக்டர் ஜி.சீனிவாஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2015

கல்லூரிகளில் கற்பிக்கும் அணுகுமுறைகளில் மாற்றம் அவசியம்: டாக்டர் ஜி.சீனிவாஸ்

கல்வித் தரத்தை அடுத்தகட்ட முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்ல கல்லூரிகளில் கற்பிக்கும் அணுகுமுறைகளில் மாற்றம் அவசியம் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் தென்கிழக்கு மண்டல இணைச் செயலர் டாக்டர் ஜி.சீனிவாஸ் கூறினார்.

சென்னை குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரி தரம் மதிப்பீட்டு அமைப்பின் சார்பில் நடைபெற்ற கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்த தேசியக் கருத்தரங்கை தொடக்கி வைத்து, அவர் மேலும் பேசியது:

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும்,அனைத்துத் துறைகளையும் அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வதிலும் கல்விக்கு மிகமுக்கிய பங்குண்டு. இணையதளம் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்பம் உச்சக்கட்ட வளர்ச்சியை எட்டிப்பிடித்து இருக்கும் சூழலில்,கற்பிக்கும் முறைகளில் நவீன தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்தப்படுவதுடன்,அவர்களது புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்தும் வகையிலும் கற்பிக்கப்படுவது அவசியமாகும்.

தங்களுக்கு அளிக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தி முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல்,மாணவர்கள் புரிந்து கொள்ளவும்,புரிந்தவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்ளும் வகையிலும் கற்பித்து உதவ வேண்டும். கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கென கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தரம் மதிப்பீட்டு அமைப்பின் பொறுப்பும், பங்கும் பாராட்டத்தக்கது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி