அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி

சிதம்பரம்:அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக, பல்கலைக்கழகத்தை, அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
தமிழக அரசு முதன்மைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நிர்வாக சிறப்பு அதிகாரியாகநியமிக்கப்பட்டார். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் போது அவற்றுக்கு, 'டம்மி' எண் கொடுத்து திருத்தம் செய்து, தேர்வுத் துறை கட்டடத்தில் உள்ள விடைத்தாள் கட்டுகள் இருப்பு வைக்கும் அறையில் வைக்கப்படும்.அவ்வாறு வைக்கப்பட்ட, கடந்த செமஸ்டரின், பி.எஸ்சி., - - எம்.எஸ்சி., தேர்வு எழுதிய, 550 மாணவர்களின், 22 வினாத்தாள் கட்டுகளை காணவில்லை.தேர்வுத்துறை இயக்குனரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் இந்த அறையை, அதற்கென உள்ள தனி அலுவலர்கள் மட்டுமே திறக்க முடியும். அப்படியிருக்கும் போது விடைத்தாள்கள் காணாமல் போனது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.நேற்று காலை, நிர்வாக அதிகாரி சிவ்தாஸ் மீனா, விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையை ஆய்வு செய்து, அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். அதில், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விடைத்தாள்களை தேடும் பணி நடக்கிறது.


'டூப்ளிகேட்' சாவிகளால்தொடரும் தில்லுமுல்லு!

தேர்வுத் துறையில் விடைத்தாள் இருப்பு அறை பூட்டின் சாவி, அனைத்து அலுவலக உதவியாளர்களிடமும் உள்ளது. தில்லுமுல்லு நடப்பதை அறிந்து, புதிய பூட்டு போட்டால், அடுத்த சில நாட்களில், 'டூப்ளிகேட்' சாவி போட்டு அனைத்து, அலுவலக உதவியாளர்களும், புதிய சாவியை வைத்துக் கொள்வது வழக்கம்.

அதனால் தான், தேர்வுத் துறையில் சர்வ சாதாரணமாக விடைத்தாள்கள் மாற்றம், மதிப்பெண்கள் திருத்தம் போன்ற தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாக, அங்குள்ள ஊழியர்கள் புலம்புகின்றனர். என்ன தான் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டாலும், முறைகேடு நடப்பது தொடர்கதையாகவே உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி