பணிநிறைவு, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெற்றபட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் மதுரையில் பாராட்டு விழா நடந்தது.அரசு வக்கீல் அருள் வடிவேல் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ஆரோக்கிய நிர்மல்ராஜன், செயலாளர் முருகேசன், பொருளாளர் சுதாகர், நிர்வாகிகள் வேல்முருகன், ஹேமலதா பங்கேற்றனர்.தமிழாசிரியர்களுக்கு பணியேற்ற நாளை கணக்கில் கொண்டு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர் பணிக்காலத்தை சேர்த்து தேர்வு நிலை வழங்குவதை செயல்படுத்த வேண்டும்.மூன்றாவது ஊக்க ஊதியம் பெறுவதற்கான கால கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று மாநகராட்சி, நகராட்சி, கள்ளர் சீரமைப்பு, ஆதி திராவிடர், நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி