அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடத்தை, முதல் பாடமாக கொண்டு வந்து பள்ளிகளில் கூடுதல் தமிழாசிரியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழாசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் 150 மாணவர்கள் படித்தால் ஐந்து ஆசிரியர்கள் நியமனம் செய்யலாம் என்ற அரசு உத்தரவு உள்ளது.அதேபோல் கூடுதலாக 30 மாணவர்கள் இருந்தால் ஒரு ஆசிரியர் நியமனம்செய்து கொள்ளலாம். கடந்த 2012க்கு முன்னர் வரை பள்ளிகளில் தமிழ்மொழிப்பாடம், கால அட்டவணை மற்றும் வகுப்பறையில் முதல் பாடமாக இருந்தது. இதனால் கூடுதல் மாணவர்கள் பள்ளிகளில் சேரும்போது முதலில் தமிழ் மொழிப்பாட ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
அதன்காரணமாக, தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில்(டிஎன்பிஎஸ்சி) தமிழ் மொழிப்பாடத்திலிருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படுவதால் அதற்கு முக்கியத்துவம் வழங்கி தமிழாசியர்கள், மாணவர்களை தயார் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் 2012 ஜூலை 6 இல், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 266-இல் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், தமிழ் என பாடங்கள் வரையறை படுத்தப்பட்டுள்ளன.இதன் காரணமாக பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்கின்ற போது முதலில் கணிதம், அடுத்து அறிவியல் என அரசு வரிசைப் படுத்தியுள்ளபடியேஆசிரியர்கள் நியமனம் செய்ய முடிகிறது. கடைசி நிலையில் தமிழ் மொழிப்பாடம் உள்ளதால் பள்ளிகளில் 300 மாணவர்கள் இருந்தால் மட்டுமே கூடுதலாக ஒரு தமிழாசிரியர் நியமிக்க முடியும்.உதாரணமாக ஒரு அரசுப் பள்ளியில் 280 மாணவர்கள் படித்தால் அங்கு ஒரு தமிழாசிரியர் மட்டுமே பணிபுரியும் இக்கட்டான நிலை உள்ளது. இதன் காரணமாக தமிழ் மொழிப் பாடத்தை கற்பிப்பதிலும், மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் மொழிப் பாடத்தை, முதல் பாடமாக வைக்க அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலர் நீ.இளங்கோ கூறியது: அனைத்து மாநிலங்களிலும் அவர்களது தாய்மொழியே பள்ளிகளில் முதல் மொழிப் பாடமாக வைத்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் தமிழ்மொழியை முதல் பாடமாக கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்றார்.
summa comment pannuvenka panuka
ReplyDeleteSumma sonna mattoum pothouma
ReplyDelete