'சி - டெட்' தேர்வு: ஆசிரியர்கள் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2015

'சி - டெட்' தேர்வு: ஆசிரியர்கள் பங்கேற்பு

மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, 'சி - டெட்' தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரியர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்; யூனியன் பிரதேச பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியராக பணியாற்ற, 'சி - டெட்' எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.இத்தேர்வை, பிப்ரவரி மற்றும் செப்டம்பர் என, ஆண்டுக்கு இருமுறை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., நடத்தி வருகிறது.


இந்த ஆண்டுக்கான, முதல் தேர்வு அறிவிப்பு, டிசம்பரில் வெளியானது. நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., படித்த லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.

இதில், முதல் தாள், இடைநிலை ஆசிரியர்களுக்கும்; இரண்டாம் தாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. இரண்டு பயிற்சிகளையும் முடித்தவர்கள், இரண்டு தாள் தேர்வுகளையும் எழுதலாம்.நேற்று, நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட, 988 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.சென்னையில், ஆறு; மதுரை, கோவை உட்பட, தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை, 9:30 முதல், 12:00 மணி வரை, முதல் தாள்; பிற்பகல், 2:00 முதல், 4:30 மணி வரை, இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும், 3,000 பேர் தேர்வு எழுதினர்.

இத்தேர்வின் உத்தேச விடை பட்டியல், அடுத்த வாரம் வெளியாகும். இறுதி முடிவுகள், ஏப்., 1ம் தேதி வெளியிடப்படும் என, தெரிகிறது.

10 comments:

  1. 2013-tntetக்கு பிறகு 4 c-tet எழுதிட்டேன்
    தமிழ் நாட்ல ஒரு டெட் ட கூட காணமேயா...

    நண்பர் ஒருவருடைய புலம்பல்

    ReplyDelete
  2. CTET LA SELECTION PROCEDURE THERINJAVANGA REPLY PANNUNGA

    ReplyDelete
    Replies
    1. obc/sc/st-82 marks(others 90) eligible for getting CTET certificate (validity 7 years) then KV SANGATHAN will conduct one major vice test(CTET passed candidates only eligible for attend that test) .if ur getting high mark then tthe board call for interview ( delhi) hindi vey very must .next merit list prepare .next posting.

      Delete
    2. QUALIFYING MARKS AND AWARD OF CTET CERTIFICATE

      The candidates appearing in CTET will be issued Marks Statement. The Candidates securing 60% and above marks will be issued Eligibility Certificate.

      (a) School Managements (Government, Local bodies, Government aided and unaided) may consider giving concessions to person belonging to SC/ST, OBC, differently abled persons, etc., in accordance with their extant reservation policy.

      (b) Qualifying the CTET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment.

      Delete
  3. Dear botany tet passed . But not appointed friends
    Send ur details to
    Saisubaskar@gmail.com

    ReplyDelete
  4. Haribaskar sir for what purpose asking these details? No use.

    ReplyDelete
  5. Pgtrb second list EPA varum reply anyone

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி