"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2015

"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்'


அரசுப் பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.உலக தாய்மொழி நாளையொட்டி,
தமிழ்நாட்டு கல்வி இயக்கம், தமிழ் வழிக்கல்வி இயக்கம், தமிழர் தேசிய முன்னணி,திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் திறந்த வாகனத்தில் பிரசாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்ற பிரசாரத்தில், தமிழை இறையாண்மை மிக்க மொழியாகவும், தமிழ் வழிக்கல்வி மொழியாகவும் ஆக்கப்பட வேண்டும்.மேலும், தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

இதுமட்டுமன்றி, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை திணிக்கக் கூடாது,அரசுப்பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள், தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி