பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2015

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை: அரசாணையில் திருத்தம்


எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,
பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி. பட்டம் பெற்றால் முதல் ஊக்கத் தொகையும், எம்.எட். அல்லது எம்.பில்., பி.எச்டி. படித்தால் இரண்டாவது ஊக்கத் தொகையும் பெறலாம் என அரசாணைதிருத்தப்பட்டுள்ளது.ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே இரண்டாவது ஊக்கத் தொகை பெறும் வகையில் இருந்தது. தலைமையாசிரியர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.இந்தத் திருத்தத்தை வெளியிட்டதற்காக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி