உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2015

உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.


திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில்நியமிக்கப்பட்ட, உ கல்வித் தகுதியை ஆய்வு செய்யும் பணியை, ஆறு மாதங்களில் முடிக்கும்படி, பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வேலூரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற பேராசிரியர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு: கல்லூரிகளில், உதவி பேராசிரியர் நியமனங்களுக்கு கல்வித் தகுதியை யு.ஜி.சி., நிர்ணயித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின், இணைப்புக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட, 5,000 ஆசிரியர் பணியிடங்களில், கால் பங்கு தான், யு.ஜி.சி., நிர்ணயித்த தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த, பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், யு.ஜி.சி., விதிமுறைகளில் கூறியுள்ளபடி, இரண்டு ஆண்டுகளுக்குள், கல்வித் தகுதியை, ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் சட்டவிரோதமானது. இதை ரத்துசெய்ய வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, ’முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: யு.ஜி.சி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’கல்லூரிகளில் நடந்த நியமனங்களை ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, ஏராளமான ஆவணங்களை, சென்னைக்கு கொண்டு வர வேண்டியுள்ளது. பரிசீலனை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின் முழுமையான வடிவம் தெரிய வரும்’ என்றார். மேலும், யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, நியமனங்கள் இல்லை என்றால், அதற்கான விளைவுகள் பின் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பொதுநல மனுவை, இந்த கட்டத்தில் அனுமதிக்க, நாங்கள் விரும்பவில்லை. நியமனங்கள் குறித்த ஆய்வை, யு.ஜி.சி.,யும், பல்கலைக்கழகமும் விரைவுபடுத்த வேண்டியுள்ளது. ஆய்வு செய்வதற்காக, ஆவணங்களை, பல்கலைக்கழகம் விரைந்து கொண்டு வர வேண்டும். இதற்கு, பல்கலைக்கழகம் ஒத்துழைக்கும் என, நம்புகிறோம்.ஆறு மாதத்திற்குள் பணிகளை முடிக்க, யு.ஜி.சி., முயற்சிகள் மேற்கொள்ளும் என,எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, ’முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

6 comments:

  1. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்குமா?

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைப்பது இல்லை ஏனெனில் உச்சநீதிமன்றத்தில் 5%மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்க யாரும் எந்த வழக்கும் தொடுக்கவில்லை....


    உச்சநீதிமன்ற வழக்குகள்:

    1)தமிழகத்தில் ஆசிரியர் பணிநியமனத்தில் தகுதிகாண் முறை என்னும் வெய்ட்டேஜ் முறை கடைப்பிடிக்கப்படுகிறது அதனை ரத்து செய்ய வேண்டும் என 3 குழுவினர் வழக்கு தொடுத்துள்ளனர்....

    2)தமிழகத்தில் முந்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வாலும் மதுரை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்தும் பணிநியமனம் நடைபெற்றதாலும் எனக்கு பணிவாய்பு மறுக்கப்பட்டது ஆகவே கருனையின் அடிப்படையில் எனக்கு பணிநியமனம் வழங்கவேண்டும் என 3குழுவினர் வழக்கு தொடுத்துள்ளனர்....

    மேற்கண்ட வழக்குகளில் எவ்வாறு 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் என யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே புரியும்...

    மதுரை 5% மதிப்பெண் தளர்வு ரத்துவின் மறுசீராய்வு மனு:

    சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக சான்றிதழ் வழங்கினர் அப்போது 5% மதிப்பெண் தளர்வில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை அப்போது அரசு மதுரையில் மறுசீராய்வு மனு தொடுத்ததாக தெரிவித்தனர் ஆனால் மறுசீராய்வு மனுவின் எண்,வழக்கின் விவரம் ஏதும் யாருக்கும் தெரியவில்லை. இவ்வழக்கின் வாதம் விசாரணைக்கு வந்ததா இல்லையா என அரசும் இதுவரை தெரிக்கவில்லை..

    ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்காது..

    Article by...
    பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர்
    ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்..
    செல் :95430 79848

    ReplyDelete
  2. அது கிடைத்தால் என்ன கிடைக்கவில்லை என்றால் என்ன 90 க்கு மேல் பெற்றவர்களுக்கு வழி என்ன?

    ReplyDelete
    Replies
    1. Supreme courtls case pottavangaluku mattum job karunai adipadaiyil kodduka kettu ullargal....

      apadi irukkum podu epadi 90 above petra anaivarukkum kidaikkum nanbaray....... ennakku puriyala therinthal pathividavum........

      Delete
    2. Dear Sankarkumar

      சந்தேகம்.
      1. தவறை மணுதாரர் சுட்டி காட்டியிருக்கும் போது, எதற்க்காக கருணை அடிப்படையில் பணிநியமனம் கேட்க வேண்டும்??.
      2. அரசு செய்த பணிநியமனத்தை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளதாக தான் இந்து நாளிதழ் செய்தி சொல்கிறது. ஆனால் மேலே திரு இராஜலிங்கம் அவர்களின் செய்தி மாறுபட்டிருக்கிறது.

      Delete
    3. Dear Sankarkumar,

      திரு கோபி அவர்கள் பள்ளிகூடம் வலைதளத்தில் முழு செய்தியையும் வெளியிட்டிருந்திருந்தார்களே. பார்க்கவில்லையா??

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி