போட்டி தேர்வு: சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2015

போட்டி தேர்வு: சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி


அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகியபாடப் பிரிவுகளுக்கு, ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால், 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாதம், 5,000 ரூபாய் மதிப்பூதியத்தில், வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிநாட்களாக வரையறுக்கப்பட்டன.எதிர்காலத்தில் முழுநேர பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகின்றனர்.

அந்த பணியிடங்களில், போட்டித்தேர்வு மூலம் நியமனம் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், மதிப்பூதியத்தில் பணி செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள், 530, ஓவிய ஆசிரியர், 250, தையல் ஆசிரியர், 160, இசை ஆசிரியர், 55 என, 995 சிறப்பாசிரியர் பணியிடங்கள் உள்ளன. போட்டித்தேர்வு மூலம் பணியிடத்தை நிரப்பினால், தங்கள் வாய்ப்பு பறிபோகும் என, பகுதிநேர ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு கவின் கல்லூரியில், ஐந்தாண்டு பட்டம் பெற்ற பட்டதாரிகள் மட்டுமே, போட்டி தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதால், சிறப்பாசிரியர் பணியிடம் பறிபோகும் நிலை, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ,'' என, கூறியுள்ளார்.

2 comments:

  1. இதற்க்கும் வைத்தார்கள் செக். Tet case முடியும் முன் ச மன்ற தேர்தல் முடிந்துவிடும்

    ReplyDelete
  2. டெல்லியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆப்தி கட்சிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்..! நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்..! காலை வணக்கம் அன்பர்களே..! தோழமையுடன் ஜித்தன்ஹரி..!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி