தேர்வை எதிர்கொள்ள ஆலோசனை: 104-இல் அழைக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2015

தேர்வை எதிர்கொள்ள ஆலோசனை: 104-இல் அழைக்கலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம்.

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வு குறித்த பயத்தைப் போக்குவதற்கும், ஆலோசனைகள் வழங்குவதற்கும் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இதுகுறித்து 104 சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது:

பொதுத் தேர்வுகளில் பங்கேற்க உள்ள மாணவர்கள் தேர்வு சமயத்தில் பின்பற்ற வேண்டிய உணவு முறை, தேர்வுக்காக உடல்நலத்தை தயார் செய்தல் குறித்த ஆலோசனைகள், தேர்வு பயம், ஞாபக மறதி, தைரியமாக தேர்வை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். தேர்வு சமயத்தில் பெற்றோர் மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பிறருடன் ஒப்பிட்டு பேசாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவையில் மனநல மருத்துவரும் இரண்டு ஆலோசகர்களும் உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி