ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2015

ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை


ஒளிவுமறைவின்றி பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுமெனதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.அதன் மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
மாவட்டத்தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். கவுரவத்தலைவர் மணிகண்டன் பேசினார்.

மே மாதத்திற்குள் ஒளிவுமறைவின்றி பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். 2010 ஆக., 23 க்கு பின் தகுதித்தேர்வின்றி பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் வழங்கி உரிய பணபலன் வழங்க வேண்டும். அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியர்களுக்கு 2007 க்கு பின் உயர்கல்வி பெற்றவர்களுக்கு பின்னேற்பு அரசாணை வழங்க வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டு 5 மாதங்களாக ஊதியம் பெறதாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் மார்ச் 8 ல் ஊர்வலம் செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி