நீதி போதனை குறித்த பாடம் பள்ளிகளில் கட்டாயமாகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2015

நீதி போதனை குறித்த பாடம் பள்ளிகளில் கட்டாயமாகிறதா?


பள்ளிகளில், நீதி போதனையை கட்டாய பாடமாக்குவது குறித்து, சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. சந்தோஷ் சிங் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
தற்போது, இளைஞர்களிடையே நல் ஒழுக்கம் குறைந்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை கற்றுத் தர தவறியது தான் இதற்கு காரணம். பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, நீதி போதனையை கட்டாய பாடமாக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனு வில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதி போதனையை கட்டாய பாடமாக்குவது குறித்து, பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி