சர்வதேச அளவில் வர்கி அறக்கட்டளையால் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான விருதுப்பட்டியலில் அகமதாபாத்தின் ரிவர் சைட் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் ‘கிரண் பிர் சேத்தி’ இடம் பெற்றுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனை கவுரவ தலைவராகக் கொண்ட வர்கி அறக்கட்டளை உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான 1 மில்லியன் டாலர் (6 கோடியே 22 லட்ச ரூபாய்) பரிசுத் தொகையும் வழங்குகிறது. ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவோர்க்கான நோபல் பரிசாகக் கருதப்படும்இந்த சிறப்புக்குரிய சர்வதேச ஆசிரியர் பரிசு தங்களது தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிக சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியருக்கே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கென்யா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உட்பட 127 நாடுகளைச் சேர்ந்த 5000 பேர் இந்த பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதில் 1300 பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் சிறப்பாக பணியாற்றிய 50 பேர் இறுதி செய்யப்பட்டனர். அதிலும் ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்த 10 பேர் இறுதி செய்யப்பட்டு அதில் ஒருவருக்கே இந்த விருது வழங்கப்படுகிறது.இந்த பட்டியலில் இடம்பெற்ற சேத்தி தனது கற்பித்தல் அனுபவங்கள் பற்றிக் கூறுகையில், "பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் கலையில் நான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளை கையாணடு வருகிறேன். முதல் நாள் ஒரு ஆராய்ச்சியாளரின் பார்வையில் பாடம் சொல்லித் தரும் நான் மறுநாள் ஒரு கலைஞராகவும், அடுத்த நாள் ஒரு கதை சொல்லியாகவும் மாறி பாடம் நடத்துகிறேன்” எனக் குறிப்பிட்டார்.இந்த 10 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சேத்திக்கு இந்த பரிசை வெல்லும் வாய்ப்பு கிடைத்தால் துபாயில் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் விழாவில் 6 கோடியே 22 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் உலகின் சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்குரிய விருதையும் பெறுவார்.
Let us hope the best as if she would overcome from competition and win the award. congrats Mam.
ReplyDeletecongrates
ReplyDelete