மாற்றுத் திறனாளிக்கான சலுகை பயணச் சீட்டு: ஐ.ஆர்.சி.டி.சி.இணையதளத்தில் பெறலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2015

மாற்றுத் திறனாளிக்கான சலுகை பயணச் சீட்டு: ஐ.ஆர்.சி.டி.சி.இணையதளத்தில் பெறலாம்


மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகை விலை ரயில் பயணச் சீட்டுகளை இனி www.irctc.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு முன்பு மாற்றுத் திறனாளிகள் ரயில்வே முன்புதிவு கவுன்ட்டர்களுக்குச் சென்று தங்களது மாற்றுத் திறன் அடையாள அட்டையைக் காண்பித்து சலுகை விலை ரயில் பயணச் சீட்டை பெற்று வந்தனர்.ரயில் நிலையக் கவுன்ட்டர்களுக்கு சென்று பயணச் சீட்டு முன்பதிவு செய்வது சிரமமாக இருப்பதாக பல மாற்றுத் திறனாளிகள் ரயில்வே நிர்வாகத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இப்போது மாற்றுத் திறனாளிகள், இணையதளத்துக்குச் சென்று தங்களது மாற்றுத்திறன்அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயிலில் பயணம் செய்யும்போது பயணச் சீட்டுடன், தங்களது அசல் மாற்றுத்திறன் அடையாள அட்டையை ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும்.பெரும்பாலான ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ப வசதியுடன் இல்லை.இப்போது, இந்த வசதியால் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களது சலுகை விலை ரயில் பயணச் சீட்டை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி