பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக 5 மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுடன் அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் கு.தேவராஜன் மதுரையில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நடப்பு ஆண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 இல் தொடங்கி ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், அரசுப் பள்ளி மாணவர்களை மாநில அளவில் சிறப்பிடம் பெற வைப்பதற்கும் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் தமிழக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் கு.தேவராஜன், மதுரையில் 5மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்குதெளிவாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். தேர்வில் முறைகேடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. தேர்வில் காப்பி அடிக்க மாணவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாளக் கூடும்.தேர்வு அறை கண்காணிப்பில் இருப்பவர்களும், பறக்கும் படையினரும் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி